மலரும் நினைவுகள் நடிப்புலக மேதை சிவாஜி ------ படித்தது

4th July 2007,
நீர் அணிந்த ஆடை கூட நடிக்கும்
உமைத்தொட்ட காற்றும் பேசி நடிக்கும்
உமை நோக்கி ஒளியுமிழும் விளக்கு நடிக்கும்
நெற்றியாடும் சுருள் முடியும் மெல்ல நடிக்கும்
கலைக்குரிசில் பாதம்பட்ட தரை நடிக்கும்
திரையரங்கம் போர்த்திநிற்கும் கூரை நடிக்கும்
கலா ரசிகன் அமர்ந்து ரசிக்கும் நாற்காலியின்
கால் நடிக்கும்,கை நடிக்கும்,திரையில் விழும்
இடைவேளை என்கின்ற எழுத்து நடிக்கும்
அது முடிய ஒலிக்கின்ற மணியும் நடிக்கும்


நரை தடவி நீர்வந்து நின்றபோது
இருபதிலும் என் முடிகள் நரைக்கக் கண்டேன்....உயிர்
வரைபடங்கள் தமிழினில் நீர் வரைந்தபோது
இரை மறந்து திரையரங்கில் தமிழ் குடித்தேன்
குறைகாண முடியா நிறை நடிப்பில்....இந்த
குவலயத்தில் உமைப்போல எவர்தான் உண்டு ?...திரு
விளையாடல் படமீனவப் பின்னணியில்
கம்பீரமும் அலட்சியமும் காலில் வைத்து....கடற்
கரையோரம் மிடுக்காக நெஞ்சுயர்த்தி...நீர்
திரை கிழிய நடை போட்ட காட்சி கண்டு
விரல் கிழிய விசிலடித்தேன்...வியந்து நின்றேன்...

'கந்தன் கருணை' படத்தில் அந்த நடையைப் பார்த்து
என் கந்தர்மடம் வரும் வரைக்கும் சொந்த நடை மறந்தேன் ஐயா...'திரு
அருட்செல்வர்' படத்தினிலே பெரும் ஆடல் அரசி பத்மினியார்
மயில் நாண ஆடும் போது ஒரு நடை நடந்தீர்...அடடா!...
நாட்டியத்தை நான் மறந்தேன் உம் பாதங்களில் தான் பறந்தேன்
நடை வெள்ளம் கொண்டே நாட்டியத்தை அடித்தீர்..
படித்து வந்தேன் உந்தன் படங்கள் பார்த்தே வாழ்க்கையிலே
மாந்தர்களின் பன்முகங்கள் படித்து வந்தேன்....ஐயா
துடித்து நின்றேன் உம் படத்து வரிசை நின்று
டிக்கெட் விற்றுத் தீர்ந்த போதும்...நம் நடிப்பின்
இமயம் விண்ணில் சேர்ந்த போதும்!

ஆழ்வாராய் வந்து நின்று தவத் தமிழை ஆண்டீர்...'திரு
மால் பெருமை' திரைப் படத்தில் நீர் குவித்த கரத்தில்
சிக்கி நின்றேன் நெக்குருகி ஜீவ தீபம் கண்டேன்
வயது பன்னிரண்டில் இப்பாலகனும் பக்தி ஆழ்வாரானேன்!
'சுருக்க' வலை சூழ்ந்திருந்தமுதிர் முகம்தனிலே
விரிஞான ஒளி சுமந்து திரு அருளை அப்புகின்றீர்...அந்த
நாவுக்கு அரசரெனும் 'அப்பர்' கதாபாத்திரத்தில்...திலகமே
நீர் வந்து நின்றீர்...அடியேன் 'அப்பூதி அடிகள்' ஆனேன்!


- யாழ் சுதாகர்

எழுதியவர் : (16-Mar-16, 12:42 am)
பார்வை : 87

மேலே