குற்ற உணர்ச்சி

சாமி கும்பிட்டவுடன் தான்
பலகாரம் கிடைக்கும்..
இது பாட்டியின் உத்தரவு!
எண்ணி எண்ணி
தட்டில் அடுக்கி
சாமிக்கு முன்வைத்தாள் பாட்டி...!
பாட்டி ஏமாந்த சமயம்..
குழந்தை இரண்டு அதிரசம் எடுத்து
தின்றுவிட்டான்...
அதனை சாமிக்கும் கூடச் சொல்லிவிட்டான்...
பாட்டி
சாமிக்கு முன் வேண்டும்போது
தலை குனிந்தபடி
குற்ற உணர்ச்சியுடன் குழந்தை...!
குழந்தையின் செயல் கண்டு
சிரித்தபடி சாமி...
குழந்தை சாப்பிடும் போதே
சாமியின் வயிரும் நிறைந்திருக்குமோ...!!!