பயம் உள்ள மனம்

புயல் அடித்து திசை
மாறி போகும் மரங்கள் போல
பயம் என்ற புயல் வந்தால்
மனிதனின் மனதில் வாழ்வும்
திசை மாறி போகும்
மனித வாழ்வு திசை மாறி
போவதற்கு உடந்தையாக வருவது பயம்
பயம் நிறைந்தவன் வாழ்வு
தோல்வி மிகுந்தது
பயம் அற்றவன் வாழ்வு
வெற்றி நிறைந்தது
பயம் தானாக
உருவாகுவது இல்லை
மனிதன் தனக்கு தானே
உருவாக்கி கொள்ளும் நோய்
மனிதன் மனிதனை வெல்ல
பயன்படுத்தும் மூல பொருளும் இதுவேய்
பயம் உள்ள மனம் நிம்மதி
அடைவதும் இல்லை தூங்குவதும் இல்லை
பயம் கொடுக்கும் தாக்கம்
வாழ்வை கேள்வி குறி ஆக்கிடும்
இது நெஞ்சில் இருக்கும் வரை
வெற்றி கதவு யாரின் வாசல்
கதவை தட்டுவதில்லை