வாழ்க்கை சதுரங்கம்
வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு,
கௌரவமா தப்பிக்கிறது தான் கடைசி வரைக்கும் முக்கியம்
ஆனா அதில
"சலித்துக்கொள்பவர் ஒவ்வொரு வாய்ப்பிலும்
உள்ள ஆபத்தைப் பார்க்கிறார்கள்...
சாதிப்பவர்கள் ஒவ்வொரு ஆபத்திலும்
உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறார்கள்..."!
நல்ல எண்ணங்கள் ஏணி மாதிரி
வாழ்க்கையில உச்சம் தொட...
கெட்ட செயல்களோ சறுக்கு மரம் மாதிரி
வாழ்க்கையில் வழுக்கிடும், பல்லு போயிடும்..!
நல்லதை பேசறது கேட்கறது தப்பில்ல
தினமும் ஒரு காப்பி சாபிடற மாதிரி..
கெட்டதை பாக்கிறது அழுக்காகற மாதிரி
அளவுக்கு மேல போனா அசிங்கம் தான்..!
உடம்புக்கும் மனசுக்கும் குளியல் முக்கியம்
சமுத்திரத்தில குளிக்கிறது தானே சந்தோஷம்..!