இடைவெளி

நேரமிருக்கிறது
காலமிருக்கிறது
காலன் கொண்டுப் போகும் முன்
காலம் கற்றுத் தந்த படிப்பினை யாவையும்
பெயரன் உனக்கு சொல்லியே செல்வேன்
என் காலம் உன் காலம் மாறியேப் போகும்
எக்காலமும் மாறா சூத்திரங்கள் பலதும்
பகிர்ந்தேக் கொள்வேன் பணிவோடு கேளாய்
உனது எனதென்ற காலங்கள் கடந்து
உனக்கும் எனக்குமான இடம் பெயர்ந்து
ஒன்றாய் சங்கமிக்கும் நாளும் நன்றே

எழுதியவர் : பிரத்யுக்ஷா பிரஜோத் (16-Mar-16, 4:32 pm)
Tanglish : idaiveli
பார்வை : 90

மேலே