தலையெழுத்தை மாற்றிய கையெழுத்துநிறைவுப்பகுதி---ப்ரியா

ரியாவின் புது கார் வடிவமைப்பில் சிறு சிறு தப்புகள் இருந்தது ஒரு சில மாற்றங்கள் என எல்லாம் சரி செய்துவிட்டு அதை லண்டன் கம்பெனிக்கு அனுப்பி வைத்தான் வசந்த்.....அடுத்த தினமே அங்கிருந்து பதிலும் வந்தது......செலெக்டா? இல்ல ரிஜெக்டா? என்று கைகள் தடுமாற அந்த கடித்ததை வாங்கினான் வசந்த்......பக்கத்தில் படபடப்போடு இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ரியா???

கடுமையான உழைப்பின் பக்கமே வெற்றியும் உண்டு என்பதை நிரூபிக்கும் வண்ணம் லண்டன் கம்பெனி இவளது அழகிய வடிவமைப்பை ஏற்றுக்கொண்டது......வசந்த் நிறுவனத்தை செலக்ட் பண்ணி அவர்கள் நிறுவனத்தோடு வசந்தின் நிறுவனத்தையும் இணைத்துக்கொண்டனர் இந்த பதினைந்துநாட்களுக்குள் உலகளவில் புகழும் பெற்றுவிட்டான் வசந்த்.......!

ரியாவின் மீது பழையபடிக்காதல் கரைபுரண்டோடியது...இடையில் நடந்த கசப்பான விஷயங்கள் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியான பசுமையான நினைவுகளை மட்டும் வளர்த்தனர் இருவரும்......

இப்பொழுது ரியாவுக்குள் ஒரு வருத்தம் இன்னும் 3நாட்களில் கீதுவுக்கு திருமணம் எப்படி வசந்திடம் கேட்பது??கழுத்தில் தாலி இல்லை....என்னப்பண்றது????என்ற யோசனையில் இருந்தவள்??

ஒரு முடிவுடன் அவன் பக்கத்தில் வந்தாள்.........என்னங்க என்று அழைத்தாள்.....இதைதான் எதிர்பார்த்தேன் என்ன சொல்லு என்றவன் அவளது அந்த பார்வையைப்பார்த்ததும் சொல்லவேண்டாம்னா? சொல்லவேண்டாம், பட் நான் சொல்றதைக்கேள் வெளியில போகணும் உடனே கிளம்பு எல்லாம் வந்து பேசலாம் என்றான்.

அவளுக்கு எதுவும் புரியவில்லை.சொல்ல வந்ததையும் சொல்லமுடியவில்லை....

பரிதவிப்போடு கிளம்பி அவனுடன் சென்றாள்.

முதன்முதலாக சந்தோஷமாக காதல் கணவனோடு ஊர்சுற்ற சுகமாகத்தான் இருந்தது உரிமையோடு அவன் கைகளை பிடித்துக்கொண்டு நடந்தாள் ரியா.......!!

முதலில் அவளுக்குத்தேவையான நகைகள்,பட்டுப்புடவைமற்றும் தேவையான பொருட்கள் அனைத்தும் வாங்கிக்கொடுத்தான்.

அவள் ஆச்சரியமாய்ப்பார்த்தாள் நாளைக்கு கீதுவின் ஊருக்கு செல்லலாம் என்றவன் என்மனைவியின் மனதிலிருப்பது எனக்கு தெரியாதா? என்று கண்ணடித்தான்......சந்தோஷத்தில் அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அவளையும் அறியாமல் வெட்கத்தை மறந்து பொதுஇடம் என்றும் பாராமல் முத்தத்தால் தன் ஆனந்தத்தை வெளிப்படுத்திவிட்டாள்........

கீதுவுக்கும் திருமணபரிசாக ஒரு நெக்லஸ் வாங்கிக்கொடுத்தான், கீது திருமணம் முடிந்ததும் ஊரறிய உன் தோழிகளுடன் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று வாக்களித்தான் வசந்த்!

இப்பொழுது இதை வைத்துக்கொள் என்று ஒரு தாலிச்சங்கிலியை வாங்கி அவனே போட்டும் விட்டான்....தன மனக்குறையை தாம் சொல்லாமலேயே புரிந்து எல்லாம் பண்றான் வசந்த் என்று பூரித்துப்போனாள் ரியா.

அடுத்தநாள் கீதுவின் திருமணத்திற்கு இருவரும் சென்றனர் ஒரு தேவதைப்போல் ஜொலித்தாள் ரியா.....இவர்களுக்கு முன்பே வந்தனா பிரதீக் தம்பதியும் வந்திருக்க அவனைப்பார்த்த வசந்த் கடுப்பானான் ஆனால் பிரதீக் சாதாரணமாய் வந்து "என்னை மன்னித்துவிடு வசந்த் எவ்வளவு திருட்டுத்தனம் பண்ணி முன்னுக்கு வந்தாலும் இறுதியில் உண்மை உழைப்புதான் வெற்றியடையும் என்பதை உன் மூலம் தெரிந்து கொண்டேன் மன்னித்துவிடுடா" என்று கேட்டுவிட்டு வெட்கத்துடன் அந்த இடத்தை விட்டு மறைந்தான்........!

"ஏங்க மன்னிப்பதுதான் பெரிய குணம் நல்லமனிதனுக்கு அதுதான் அழகு" என்று வசந்த் காதுகளில் முணுமுணுத்தாள் ரியா.

சரி என்பதுபோல் கண்ணசைத்தவன்..... பிரதீக்கிடம் சென்று "விடுடா மச்சான் நான் எல்லாத்தையும் மறந்துட்டேன் வீட்டுக்கு வா" என்று சொல்லி உரிமையாய் அணைத்துக்கொண்டான்.

அப்பொழுது அங்கு வந்த வந்தனாவும் மன்னிப்பு கேட்டாள், கண்ணீரால் தன் பாவத்தை கழுவினாள்....வந்தனா பிரதீக் மற்றும் கீது விஜய் அங்கு வந்தனர் எப்படியோ நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம் என்று விஜய் சொல்ல.......ரியா ரொம்ப நல்லவ கண்கலங்காம பார்த்துக்கோங்க என்று வந்தனாவோடு கீதுவும் கெஞ்சலுடன் சொல்ல....??????

அப்பொழுது வசந்த்......"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது 100%உண்மையே"..... என்னோட தோல்விக்குப்பின்னால எப்டி என் மனைவி இருந்தாளோ?அதேபோல் என்னோட வெற்றிக்கு பின்னாலயும் அவள்தான் இருந்தாள்,இருக்கிறாள்,இருப்பாள் என்று சொல்லி அவள் மீது காதல் பார்வை ஒன்றை வீசினான்..........!

அவர்கள் குடும்பம் மொத்தமும் இவர்களோடு சேர்ந்து...எப்படியோ நாம் நினைத்தது போல் மூன்று ரோஜாக்களும் சேர்ந்துவிட்டனர் இனி என்ன எப்பொழுதும் வசந்தம்தான் என்று வாழ்த்தினர்.

அந்த இடமே ஆனந்தக்களிப்பில் காட்சியளித்தது..

சுபம்.

எழுதியவர் : ப்ரியா (18-Mar-16, 12:23 pm)
பார்வை : 613

மேலே