அவளின் காத்திருப்பு

தொடுவானத்தில் மேக முத்தம்
பரிமாற்றம் நடக்கும் நேரம்.சிதறி விழும் தூரல் மண்ணில் வரைகிறது
புள்ளிகோலம்.மழை சாரலில் இலைகளில் யாவும் கண்ணாடி ஓவியம். மழை துளியின் எடை தாங்காமல் கீழே விழும் இலைகள்
மழை துளிகளுக்கு போட்டியாய்.
அவளின் கூந்தல் தொட்டு உயிர்த்தெழுகிறது. தேகம் தீண்டும் பனிகாற்று படபடக்கிறது பட்டாம்பூச்சிக்கு போட்டியாய். எதையுமே! கண்டு கொள்ளாத ஆலமரம் நின்று கொண்டே கனவு காண்கிறது. விழிகளின் ஈரத்தை துடைத்து கொண்டு அவள் அன்று நடந்ததை நினைத்து பார்க்கிறாள்.
அவனும் இவளும் முகம் அறியாது காதலர்கள் இரவு பகல் அறியாது காதலித்தனர். இதே நேரம் இதே இடம்
அவன் வருவான் அவளுக்காக உனக்காக
எவ்வளவு நேரமானாலும் காத்திருப்பதாக அவள் சொன்னவார்த்தைக்காக இரண்டு ஆண்டுகள் அவன் வருகைக்காக காத்திருக்கும் இனிமேலும் காத்திருக்கும் விதவை காதலி அவள்...

எழுதியவர் : சிவா (19-Mar-16, 3:24 pm)
Tanglish : avalin kaathiruppu
பார்வை : 614

மேலே