இருபது ஆண்டுகளுக்கு முன் தென் தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவம் - மாமனிதர் இவர்

நாகர் கோவில் மாவட்டம் வள்ளியூர் அருகே
சுண்ட விளை கிராமம் .அன்று கிராமமே! திருமண கோலம் போட சத்தம் இன்றி நடந்து முடிந்தது அவளின் திருமணம். வாழ்க்கையின் நாட்கள் ஒட தொடங்கினர்
மனித பிறவிக்கே உரியதான தொடர் பிரசவ சத்தம். வருடங்கள் உருண்டோட கனவனின் குடியின் விரீயமும் அதிகரித்தது. இரவு உணவு நாளைய விடியலை பொறுத்தது. காலை சூரியன் அவர்களின் வயிற்றை நிரப்புகிறது. இரவு சோறு விடிவதற்குள் உணவாகிறது எறும்பிற்கு. தினம் தினம் அடி உதை இன்னும் எத்தனையோ! சித்தரவதைகள் தாங்க முடியாத பெண்மை உயிர்த்தெழுந்தது கண்னகி உருவத்தில்.
இரவோடு இரவாக வெளியேறி விட்டது அந்த பெண் தெய்வம் தோளில் மூன்று பிள்ளை நிலாக்களை சுமந்து கொண்டு
அடைக்கலம் புகுந்தாள் அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்திற்குள்

அதிகாலை நேர பொழுது மெலிந்த தேகத்துடன் கிழிந்த ஆடை வேப்பமர நிழலை சுவாசித்த படி சாய்ந்து இருக்கிறாள்.
பசியின் மொழியால் குழந்தைகள் கையேந்த ஆரம்பித்தனர்.அதை தடுக்க கூட சத்து இன்றி சாய்ந்து கிடக்கிறாள்.

கையில் சூட்கேஸ் உடன் தோளில் துணி பையை சுமந்து கொண்டு மிடுக்கான தோற்றத்துடன் ஒரு மனிதன் ஆம்! .அவர்தான் அந்த மாமனிதர்.அன்று தான் வெளிநாட்டில் ஐந்து ஆண்டு வேலை பார்த்து வருகிறார்.

இவர் முருகன் அவளின் மாமன் மகன் சிறுவயது தோட்ட பூக்கள் அவளின் இளமைகால செல்வந்தர் வாழ்க்கையை நினைத்து பார்த்து கொண்டே விழிகளின்
இரத்தை சுமந்து கொண்டு அவளின் விழிவழியே நடந்ததை புரிந்து கொள்கிறான்.
என்ன செய்வது என்று அறியாது நிற்கிறார்கள் இருவரும். அவசர முடிவாக மாமனிதர் கோவிலில் வைத்து தாலி கட்டி வாழ்க்கை கொடுக்கிறார். பிள்ளைகளையும் கூடவே அழைத்து சென்றார்

புது வாழ்க்கை! புதிய பாதையில்!
ஆரம்பமாக்கியது


பின் குறிப்பு: (மாமனிதர் பெயர் முருகன் இவர்கள் இன்னும் சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டே... இவர் என் தந்தையின் நண்பன் மூன்று பிள்ளகளைக்காக தான் பிள்ளைகளை பெற்று கொள்ளவில்லை.
கடைசி மகள் திருமணத்திற்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தபோது அவரை பார்த்து வியந்தேன் நான்......... பெற்ற பிள்ளைகளை வளக்க யோசிக்கு தந்தைகளுக்கு மத்தியில் இவர் மாமனிதர்)

எழுதியவர் : சிவா (20-Mar-16, 12:16 am)
பார்வை : 462

மேலே