காதல் குற்றம்
அவள் வருகைக்காகவே
நெடு நேரம் காத்திருப்பேன்
தொலைவிலே என்னை அடையாளம் கண்டும்
காணதவள் போல் நடித்து
என்னை கடந்து செல்லும் போது
ஓரப்பார்வையால் தீண்டி சென்று
என் காதலை வளர்க்கும்
அவள் மேல் குற்றம் இல்லையாம்
நான் அவளை காதலிப்பது குற்றமாம்