இலவசம் எனும் வசியம்

கடைத்தெருவுக்கு சென்றாலும் ;
கண்களில் காணும் முதல் காச்சி ;
"இலவசம் "

துணிக்கடைக்கு சென்றபோதும் ;
இலவசமாய் கிடைக்கும் -
துக்கடா பைகளை சுற்றியே !

காய்கரியானாலும் கரிகடையானாலும் ;
கடைசியாய் கேட்டுப்பெறும் -
இலவசமாய் ஒரு துண்டு !

தலைகனம் தளருதே !
தன்மானம் பறக்குதே !
இல்லறமும் மறக்குதே !
இலவசம் எனும்போது !

வார்த்தை ஜாலத்திலே ;
வாக்குகளை தேடுகிறான் !
வறுமையில் கிடப்பவனோ ;
வாயை பிளக்குறான் !

வாழ்வெல்லாம் மாறுமென்று ;
வாக்களிக்க போகிறான் !
இலவசத்தை வாங்கிக்கொண்டு -
இருண்ட வாழ்வை தேடுறான் !

ஆட்சி அமைக்க இலவசத்தை ;
அள்ளிஅள்ளி வீசினான் !
அறிவை மறந்த மனிதன் இங்கே ;
அழிவின் விளிம்பில் நிக்கறான் !

தேர்தல் இப்போ வருகுது ;
தெருவெல்லாம் தோரணம் !
தெளிவின்றி நீ இருந்தால்;
தெருக்கோடியில் கோவணம் !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (21-Mar-16, 9:56 am)
பார்வை : 261

மேலே