நான் நானாக

ஒரு இராட்சசியின் கொடூர முடிஎன் காலில் விழுந்தது.
அந்நாள் முதல் இந்நாள் வரை
அவளைத் தின்று கொண்டிருக்கிறான் அவன்.

அவனது நிழல் அச்சாரத்தில் மேயும்
சிறு நினைவுக்கு கூட என்னிடம் பதில் இல்லை.

என் இதயம் உறுத்தும் போது
அவன் விழித்திருக்கிறான்.
அங்குமிங்குமாய் பாய்வது தான்தான்
என சலனப்படுத்துகிறான்.

ஒரு நாள் அவள் தற்செயலாய் உதடசைக்க
மையிட்ட விழியின் சொற்களை விழுங்கியவன்
பைத்தியம் முற்றிய இராட்சனாக மாறினான்.

அவன் உலகெங்கும் தேவதை.
பாதையெங்கும்
அத்தேவதையின் மார்பு மறைத்த ஊதாப்பூ
நிலா ஒன்று சிவந்து உதட்டு சாயலில்
அவனது வானத்தில் ஒட்டிக் கிடந்தது.
அவனது பயணம்
புது கால்கள் தினமும் முளைப்பதை காட்டியது...

அவனைச் சாகடிக்கும் உரிமை
எவனிடமும் இல்லாத போது
என்னிடமிருந்தது அவளுக்கான ஒரு பொதிந்த பதிலும்
இராட்சனுக்கான ஒரு புன்னகையும் தான் !!!

இருள் சூழ் கிழிக்கும்
ஒரு தவளையின் சத்தம் போல்
அவனது
பதில் பாய்கிற இதய வாசலை கடக்கும்
காதல் குமிழிகளை
ஒரு ஆழ்ந்த கேவலுக்குள் வைத்து
புன்னகையால் மறைக்க
இச்சமுகமும் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது...

எப்படி பார்த்தாலும்
நான் நானாகத் தெரியுமளவு
அவன் என் முலாமாகத் தெரிகிறான்.

எழுதியவர் : முருகன்.சுந்தரபாண்டியன் (22-Mar-16, 3:22 pm)
Tanglish : naan naanaaga
பார்வை : 174

மேலே