காதலால் காலனும் வியந்தான் -முஹம்மத் ஸர்பான்

கண்ணீர் சிந்தி நிம்மதி வாங்குகிறேன்
உள்ளம் மேலே அவளை தாங்குகிறேன்
கனவின் வழியில் முட்களில் உறங்குகிறேன்
மனதை தொலைத்து முகவரி தேடுகிறேன்
பார்வை எங்கும் அவளை காண்கின்றேன்
அருகில் சென்று கானல் உணர்கின்றேன்
கண்ணாடியாய் தரையில் விழுந்து உடைகின்றேன்
அவளின் நினைவால் மீண்டும் உருவானேன்

மெளனச்சிறையில் என்னை அடைக்கின்றாள்
ஆயுள் முழுதும் அணுயனுவாய் கொல்கின்றாள்
என்புகள் கொடுத்து மெட்டி வாங்கினேன்
அன்பு இல்லாமல் தூக்கி வீசினாள்
கடலில் மூழ்கி மரணம் கேட்டேன்
அலையாய் வந்து கரையில் சேர்க்கிறாள்

பூக்கள் எங்கிலும் உந்தன் காட்சி
எந்தன் காதல் உலகின் ஆட்சி
தோற்றுப்போனால் வாழ்க்கை கூடாது
காயம் இன்றி காதல் வாழாது
இரு மனதை கொடுத்து ஒரு மரணம்
காலன் கூட காதல் கண்டு வியக்கின்றான்.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (22-Mar-16, 1:41 pm)
பார்வை : 162

மேலே