தள்ளிப் போகாதே
நிலவின் ஒளியில்...வானின் அடியில்
நானும் இங்க தான்
பனியை சுமக்கும் நெல்ல போல
சாஞ்சி கிடக்கன் நான்...
கடைக்கண்ண காட்டி-காரிகையே
என்ன நீ தீண்டி சென்றதாலே
உடம்பு வேகுதடி உசுரு இல்லாம.,
உன் வார்த்த அதுக்காக
என் வாழ்க்க முழசும் தான்
மனசோரம் காத்திருக்க வருவேன் டீ
மேகம் எலாம் நெருங்க மறுத்த பின்னே
கானல்நீர் மட்டும் இங்கே
ஊத்தெடுக்குது என்னே...
என் காதல் ...வெறும் காதல் இல்ல
சாதல் என்பது அதுக்கு இல்ல...
உயிரில் கலந்த உறவு போல
இருந்த நீயும் விட்டு சென்றதேனோ...
நதியின் முடிவில் அருவி பிறப்பதாலே
நதியின் பிள்ளை அருவி ஆகாதே...
விதி என்னும் இரட்டை எழத்து
முந்தி நிற்பதாலே
என்னை பிரிவது
சதி ஆகாதோ....
சொல்லு என் ராசாத்தி
காத்து கிடக்கன்
பதில சொல்லு மருவாச்சி...