நாட்டியம்

அவளுக்கான சுவாரஸ்யங்களை
போனஇடத்தில் பொத்தி
ஒளித்து வைத்திருந்தாள்!
எதோ ஒருசில
நளினங்கள் இயல்பாக வெளிவரும்
பொழுதுகளில்
விழிகளில் கதைபேசி
பாவனையில் சில
அபிநயங்ளை உதறிவிடுவாள்
அதை ரசிக்க யாருக்கும்
மனசும்இல்லை!
நேரமும் இல்லை!

எப்போதுமே
ஒரு கைதட்டலை
நிசப்தங்களுக்குள்
எதிர்பார்த்து தோற்றுப்போவாள்
பொருளாதார புதையலை
கண்டுபிடிக்கும் வெறியில்
கலைநயங்கள் அடிக்கடி
ஏளனங்களில்
காயப்படுவதும்!
தட்டிக்கொடுக்க நாதியற்ற
சுத்தசூனீய நகர்வொன்றில்
பலவந்தமாக பயணப்படுவதுமே
வாழ்க்கையாகிறது!
வந்து,இருந்து,பேசி,
சென்றுபோன
நினைவுகளை
கொழுசும், மெட்டியும்
ஞாபகப்படுத்தி,
காலவதியாகாமல் காப்பாற்றிக்கொள்ளும்
சந்தர்ப்பங்களும்!

சபை நடுவில் பட்டமும்,
பாராட்டும், கிடைக்கும்
போதெல்லாம்
ஆசீர்வாதங்கள்
நம்பிக்கைக் கண்ணீரில்
ந னையும்

ஆனால் இப்பவெல்லாம்
அவள் தனிமைக்கு
ஒரு ஆறுதல்
பழுத்துப்போன நிலைக்கண்ணாடியும்
தன்னம்பிக்கையில் குளித்தெழும்பிய
அவள் விம்பமும்!!!

எழுதியவர் : லவன் (24-Mar-16, 3:25 am)
சேர்த்தது : லவன்
பார்வை : 159

மேலே