அந்நாள் வரையும்

உடல் முழுக்க ரண வலியாம்..
உயிர் பிரியும் ஒரு நொடியாம்..
அவன் அழும் வரை இவள் அழுதாள்..
அழுதோய்ந்தவள் வயிர் கிழிந்தாள்..

வெளி வந்தவன் பெரும் புலியாம்..
அவன் தலையில் இரு சுழியாம்..

சுழி சிரத்தான் வயிர் ஊதிட..
வயிர் கிழிந்தாள் சுழி கோதிட..
மகன் வளர்ந்தான் நெடுநெடுவாய்..
அவள் சிரித்தாள் அதற்க்கழகாய்..

வயதானவள் ஒரு கிளமாம்..
அவன் தாயோ பெரும் சுமையாம்..

நடு வழியில் இழுத்தெரிந்திட..
நடுநடுங்க விழி கலங்கிட..
கை ஊனி அவள் எழுந்தாள்..
கால் வளைந்திட நடை நடந்தாள்..

உயிரில் ஓர் உயிர் சுமந்தவள்..
கருவிழியில் அனல் மொழிந்தாள்..
இனி நடந்திட என்னால் முடியும்..
வழி முடிந்திடும் அந்நாள் வரையும்!

எழுதியவர் : பிரேம் குமார் (24-Mar-16, 6:23 am)
Tanglish : annaal varaiyum
பார்வை : 453

மேலே