நட்பு

நீயென நானும் நானென நீயும்
நீளும் பொழுதுகளோடு
நாமென உணர்ந்து
நம் இதயங்கள் சிலுவை
சுமந்தது போதும் ..

உன்னிடத்தில் நானிருந்து
என்னிடத்தில் நீயிருந்து
நம்மிடத்து வலிகளுக்கு
நம் விழி நீரால்
ஒத்தடமிட்டதை
நாம் இருவரும்
அறிந்திருக்கவில்லை..

களங்கமற்ற கடந்த நாட்களை
கற்களில் வரிகளாக்கி
காலத்தின் கையில் காணிக்கை
அளித்துவிட்டு
ஆன்ம நதிகளின் ஆழங்களில்
விசுவாச நேசங்களை
நீந்தவிடுவோம்

கற்புள்ள நட்பில்
அஸ்திபாரம் இட்டு
காதல் கடந்து கட்டும்
நல்ல நட்பின் கோட்டை
காலத்தால்
அழியாது வாழ
காகித விரல்களினால்
அவ்வப்போது
கைகுலுக்கிக் கொள்வோம்..

எழுதியவர் : சிவநாதன் (25-Mar-16, 12:57 am)
Tanglish : natpu
பார்வை : 70

மேலே