நடமாடும் நதிகள் -உடுமலை சேராமுஹமது

வீரிட்டழும் பிள்ளை
பாலூட்ட முடியா தாய்...
வறுமை ..,!

கடந்து போன காதல்
முகமெல்லாம் நிறைந்து போன தாடி ...,
காதல் தோல்வி ..!

விடியலைத் தேடும்
விட்டில் பூச்சிகள் ....,
வேலையில்லா பட்டதாரிகள் ...!

பை நிறைய பணம்
பசியாற முடியவில்லை ...,
பணக்கார வியாதிகள் ...!

வரப்பில்லா காட்டில்
மின்னும் தங்கங்கள் ....,
நட்சத்திரங்கள்...!

விலையில்லா பொருள்கள் வீட்டில்
வேலையில்லா திண்டாட்டம் நாட்டில்
முறையற்ற நிர்வாகம் ..!

சிறுவனின் காகிதக் கப்பல்
அடம் பிடிக்கும் வறண்ட மேகம்
வானம் பார்த்த பூமி ..!

விழிகள் மேய்கிறது
மொழிகள் ஓய்கிறது ...,
காதல் பாடம் ...!

பணம் கொடுத்து வாங்க முடியாத
பக்க விளைவில்லாத வலி நிவாரணி ...,
தாயின் அன்பு...!

வெட்கப்பட்டு தலைகுனிபவள்
வெறிகொண்டு தலை கொய்கிறாள் ..
கற்புக்கு களங்கம் வரும் போது..!

நன்றி :
நடமாடும் நதிகள் ஹைக்கூ குழுவிற்கு ..

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (25-Mar-16, 12:15 am)
பார்வை : 167

மேலே