குறுங்கவிதை

தமிழ் மொழியில்
குறுங்கவிதை எழுசீர் வெண்பா
திருக்குறளே;

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள் - திருக்காடர்.

குறுங்கவிதையினால் ஆய
பயன் என்கொல்?

எழுதுவது எளிது,
வாசிப்பவர்க்கு எளிது,
வாசித்தவுடன் முடிந்துவிடும்;

மீண்டும் மீண்டும் வாசிப்பது எளிது,
மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுவது,
வாசித்தபின் மின்னலெனப் புரிவது எளிது;

ஒரே வாக்கியத்திலும் உருவாக்கலாம்,
நம் உள்ளே பனிக்கட்டியாய் உருகலாம்,
நம் தண்டுவடத்தில் சிலிர்ப்பூட்டலாம்;

சொற்கட்டு அலங்காரமாக இருக்கலாம்.
ஒன்றிலிருந்து ஒன்பது சொற்களுக்குள் எழுதலாம்,
சிறிய வேண்டுதல் வழிபாடாக அமையலாம்,

குறுங்கவிதையின் இலட்சணங்கள்
விரிந்தும், மாறியும், வளர்ந்தும்
என்றென்றும் வாழும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Mar-16, 10:06 pm)
பார்வை : 449

மேலே