புதுமை பெண்கள்

பாரதி கண்ட புதுமை பெண்களே!
எம் பாரத நாட்டின் கண்ணிண் மணிகளே!
நீர் பூட்டிய வீட்டின் சிறையை உடைத்து!
அந்த விண்ணை ஆள புறப்படுங்கள்!

பாரதம் போற்றும் பெண்மை என்றால்!
தாய்மையின் நிகர் யாருமில்லை!
மனிதன் காணும் கடவுளின் தோற்றம்!
அன்னையின் உருவில் பூமியில் இருக்கும்!

பொறுமை கொண்ட பெண்மை கூட!
தன் கற்பை காக்க ஆயுதம் ஏந்தும்!
பொறுமை கொண்ட பூமாதேவி!
தன் பொறுமை இழந்தால் நாம் என்னாவோம்?

கரையை தொட்டு செல்லும் கடலன்னை!
தன் கரையை கடக்க நினைத்தால்!
பேரலை என்று பெயருன்டு!
பெரும் சேதம் அதற்குண்டு!

சமயல் அறையில் காலத்தை கடந்தால்!
சாதனை எல்லாம் சரிந்தே போகும்!
வேதனை தாண்டி வெளியே வந்தால்!
அந்த "வானம் உன் வசப்படும்"!

உன்னை சிறை பிடிக்க நினைத்தால்!
நீ சிறகவிழ்த்து பறந்திடு!
வானம் உனக்கு எல்லையில்லை!
நீ நிலவை முட்டி விண்ணில் ஏறு!

காலில் விலங்கிட்டால் பெண்ணே!
நீ கையில் எழுந்து நடந்திடு!
உன் வாழ்க்கை முடிந்தது என்று!
சவமாய் உலகில் வாழாதே!

சாதிக்கும் எண்ணம் உன்னில் இருந்தால்!
நீ சரித்திரம் போற்றும் பெண்மை யாவாய்!
சாதனை படைத்த பெண்கள் எல்லாம்!
இறந்தும் வாழ்வர் உலகில் என்றும்!

சரித்திரம் படிக்க நினைத்தால்!
சராசரி பெண் நீயாவாய்!
சாதனை படைத்துவிட்டால்!
உலகம் போற்றும் "புதுமை பெண்" நீயல்லவா!!!

எழுதியவர் : இரா.உமாசங்கர் (26-Mar-16, 8:58 pm)
Tanglish : puthumai pengal
பார்வை : 24745

மேலே