சில உறவுகள்

கண்ணீர் எது?
காயம் எது??
அறியாத சோகத்தில்
நான் இருக்கும் நேரம் இது!!

காதல் இதுவா?
நட்பு இதுவா?
மிஞ்சி போன ஏக்கத்தில்
மிதந்து வந்த வாழ்வு அதுவா?

சோகம் கொண்டேன்!
மோகம் கண்டேன்!
மறந்த போன உறவால்
மௌனம் நான் கொண்டேன்!

இதுதான் சரியா?
அதுதான் சரியா?
ஒன்றுமே தெரியாததால் என்
உலகம் பிழையா?

எதுவோ நினைத்தேன்!
இதுவே பெற்றேன்!
சூழ்நிலையால் நான்
காலம் கழித்தேன்!

எந்தன் விதியோ?
இந்த மதியோ?
இந்த நேரம் என்
வாழ்வில் ஆயிரம் பிழையோ?

கடைசி நேரம்,
வாழ்வு முடியும்தருணம்,
அவள் முகத்தை பார்த்தால் என்
வாழ்வு சொர்க்கம் போகும்!

முடிந்து போய்விட்டாள்!
பிரிந்து போய்விட்டாள்!
பல காயம் தந்து என்னை
மறந்து போய்விட்டாள்!!

எழுதியவர் : (26-Mar-16, 8:20 pm)
Tanglish : sila uravukal
பார்வை : 274

மேலே