தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 1 8 = 50

பள்ளிக்கூட பாடம்
சொல்லித்தரும் மேடம்
நல்ல காதல் பாடம்
கற்றுத்தர வேண்டும் !

தங்கவேல் நைனா
தொங்குறது சைனா..?
சொல்லு நீ நைனா
கேட்குது உன் மைனா !

செயற்கை முறையில் தளர்ச்சி கொள்ளும்
அயர்ச்சி பணியை விலக்கி விடுவோம்
இயற்கை முறையில் கிளர்ச்சி கொடுக்கும்
உணர்ச்சி பணியை வளர்த்து விடுவோம்!

காலை வந்து மாலை மறையும்
கதிரவனை நெருங்க யாருக்கு தைரியம் ?
காதலி கண்ணை காட்டினால் போதும்
காதலன் கைகள் இரும்பாய் மாறும்..!

தேவை ஒரு பாவை என்று
தேடுவது பாவம் அன்று
தேவை மீறீ போகும் போது
பூவை பாவம் பொல்லாதது

வீட்டில் செய்யும் கட்டில் வேலை
வட்டியும் முதலும் கொடுக்கும்
சிட்டு சேலைக்கு அடிமையானால்
அத்தனை வேலையும் மறந்துப் போகும்

பூவை வாங்கி தலையில் வைத்தால்
புன்னகை சிந்தி முணு முணுப்பாள்
சேலை வாங்கி கொடுத்து விட்டால்
தெய்வ லோக கனவில் மிதப்பாள்


குடும்ப பாரம் சுமக்கும் தாரம்
இரும்பு உடம்பும் துரும்பா மாறும்

இருவரும் வேலையை பகிர்ந்துக் கொண்டால்
உடும்புப் போல உடல்வாகு ஏறும் !

எழுதியவர் : சாய்மாறன் (26-Mar-16, 10:41 pm)
பார்வை : 136

மேலே