கைதிகளாய்
சமூக வலைத்தளங்களுக்குள்
சக கைதிகளாய் அனைவரும்
சொந்தங்கள் பாராமுகமாய்
பேசா மந்தையாய் இருந்தாலும்
போலியாய் பரிமாறப்படும்
வார்த்தை நலன்கள்,விசாரிப்புகள்,வாழ்த்துகள்
முகமே அறியாதவரும்
வாழ்த்து வாசித்தாலும்
மனம் என்னவோ வெறுமைதான்
இங்கு எதைக் கற்றுக்கொண்டோமோ
இல்லையோ
நடிக்கக் கற்றுக் கொண்டோம்
எங்கு சென்றிடினும்
வலைத்தளத்துக்குள் பூட்டப்பட்டு
எங்கு சென்றிடினும்
விரலசைவில் வலைத்தளக்கைதியாய்
கால்கள் ஓரிடத்தில்
கைகள் வலைத்தளத்தில்
சிறைப்பட்டக் கைதியாய்
சுதந்திரங்களை பறி கொடுத்தவர் போல்
யார் எதைச் செய்தாலும்
நாமும் செய்வதும்
ஏதோ விருது பெறப்போவதுபோல்
முந்திக் கொண்டு நிகழ்வுகளை வாசிப்பதும்
மனிதனின் சாதனை வலைத்தளத்துக்குள்
நிகழ்வுகளை வாசி்ப்பது அல்ல
சோதனைகளை கடந்து வாழ்வது
பின்தங்கிய மனிதர்களை முன்னேற்றுவதுமே
நேர்மையையும்,நியாயத்தையும்
வெறும் லைக்குகளுக்காக
விற்கும் வசனங்களாக
பகிர்ந்து கொண்டு
நம்மிடம் இருக்கிறதா
என்றெல்லாம் யோசிப்பதுமி்ல்லை..
அவரவர் பணியை நேர்மையாக
அக்கறையோடும்,குறையின்றி
ஆற்றுகையில் தானாக
முன்னேறிடும் நாடு
எதையும் பயன்படுத்திக் கொண்டு
ஒப்பேற்றுவது அல்ல வாழ்க்கை
ஒப்பில்லாத வாழ்க்கை வாழ முயல்வதே சிறப்பு