குறும்பாக்கள்

                      
            குறும்பாக்கள்

         

அசைந்தாடும் நதி
அழகான பூ நடனம்
வானில் நிலா.....

தமிழ் நா பழகியது
பிற மொழி நாவில்
மொழி கொத்தடிமை........

தீக்குச்சியின் தலை வெடிப்பு
ஒளி ஒலி பிறந்ததும் இருள் தற்கொலை
காற்றின் மொழி........

மலையானைகள் கூட்டமாய்
தொடர்வண்டி பயணத்தில் என்னோடு பனித்தூரிகை ஓவியம்...........

பூப்பதில்லை இதழ்விரித்து
வாசம் நுகரும்
ரோஜா முட்கள்...........

மறுபிறவி எடுக்கிறது
ஒவ்வொரு மாதமும்
பிறை நிலவு  ...........

பழைய மாளிகை
இருட்டில் அழைக்கிறது
வவ்வால் சத்தம்..........

கருமையை வெளுத்தது
சலவைக்குப்போகாமல்
முதுமை நரை.........

செலவில்லா ஒலி ஒளிப் பெருக்கி
மின்னல் அழைப்பு இலவச மழைக்கு 
வானில் திருவிழா.......

கரித்துண்டில்  உலக ஓவியம் 
வறுமையில் ஓவியச் சிறுவன்
சில்லரை இந்தியா...

மேலிருந்து கீழேவிழுந்தும்
மீண்டும்மீண்டும் பிறவி எடுக்கிறது
கோடைக்கால அருவிகள்..

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (28-Mar-16, 4:54 pm)
பார்வை : 102

மேலே