யாதுமாகி நின்றாள்

சாகத் துணிந்தவள்
இன்று
சாதிக்கத் துணிந்தாள்...!

கண்களில் அச்சம் கொண்டு
தலைத் தாழ்த்தி நடந்தவள்
இன்று
தலை நிமிர்ந்து நடக்கின்றாள்
எதையும் சாதிக்கும் உறுதி
மனதில் கொண்டு...!

ஏளனம் செய்பவர்களையும்
தன்னை ஏசுபவர்களையும்
எண்ணி கலங்கியவள்
இன்று
பார்வையால் கோபத்தீயைக்
காட்டிச் செல்கிறாள்...!

சாதிக்க நினைத்தவளை
சாகத் துணிய செய்த விதியை
இன்று
மதியால் வெல்கிறாள்
சாதிக்க துணிகிறாள்....!
அந்த
சாவையும் சாகடிக்கின்றாள்...!

திறமைகள் பல இருந்தும்
தன்னை உயர்த்துபவர்கள்
இல்லையே என எண்ணியவள்
நம்பிக்கையின் வேர்பிடித்து
திறமையை வெளிக்காட்ட
திரண்டெழுகின்றாள்...!

திறமைகளை வெளிகாட்டா வண்ணம்
அடிமையாக்கி அணையிட்டிருந்தவர்களின்
அஸ்திவாரத்தை தகர்த்தெறிந்து
இன்று
வீறுகொண்டு நடக்கின்றாள்
சாதிக்க......

சாவின் விளிம்பில்
கற்றுக் கொண்டாள்.....
ஆண் அவனின் அடிமைதளைகளை
தகர்த்து துணிந்து வந்தவள்
சாவை நோக்கி போவானேன்...!
அத் துணிச்சலை தன் சாதனைக்கு
முன் வைத்தாள்.....
நம்பிக்கையுடன்......

இன்று..
ஆண் ஆதிக்க சிறையில்
இருந்து விடுபட்டாள்...
விண்ணை நோக்கி
சிறகை விரித்து
பறக்கத் தொடங்கினாள்...
சாதிக்க......
யாவும் ஆகி நின்றாள்...

எழுதியவர் : நித்யஸ்ரீ (30-Mar-16, 12:00 pm)
Tanglish : yathumaagi nintraal
பார்வை : 102

மேலே