கண்டும் தெளியவில்லை

மண் என்று ஒர் இளக்காரம்
மண் தானே என்ற ஓர் அலட்சியம்
மண்ணே பொன் என்று அறியாமல் .

மண்ணாவே போவாய்
மண்ணுக்குள்ளே போ
என்ற ஓர் ஆங்காரம்.

ஒரு மண்ணும் தெரியாது
நீ ஒரு மண்ணு மண்ணு
என்ற ஓர் உதாசினம் .

அதோடே மண்ணாசை
ஒரு பேராசை என்ற
ஓரு நீட்டிப்பு .

அதனுள்ளே மண்
பொன்னை விட உயர்வு
என்ற ஓர் ஆவல்.


மண்ணின் மகிமை
மண்ணின் பொறுமை
மண்ணின் வலிமை


அறியாதார் பேசும்
பேச்சு கேட்டு
முடியவில்லை.


கண்டும் தெளியவில்லை
என்கிற போது மனம்
கலங்குகிறது அனேகமாக .

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (28-Mar-16, 5:47 pm)
பார்வை : 327

மேலே