யாதுமாகி நின்றாய்

கைக்கிளையில் கனியானாய்
காரிருளில் ஒளியானாய்

காந்த பட்சிகளின்
கானகமும் நீயானாய்

விண்கல் மோதலில்
விண்ணில் முளைத்திட்ட
விடுகதை நிலவானாய்

விருட்சத்தின் விதை தூவும்
விளைநிலமும் நீயானாய்

ஐந்திணைகளின் அணைப்பினில்
தலைவனுக்கும் தலைவியானாய்

வாழ்க்கையின் விரிந்த வீதியில்
வெள்ளிவீதியும் நீயானாய்

அன்பினைத் தெளித்து
அன்னை தெரசாவானாய்

நீதியை நிலைநாட்ட
மதுரையில் மையலிட்ட
கண்ணகியும் ஆனாய்

கலமேறிச் சென்று
கருவானில் கால் பதித்துக்
கல்பனாவும் நீயானாய்

ஊமைக்கும் மொழியானாய்
உணர்வுகளின் உருவானாய்

இதோ, இன்று என்
கவிதையிலும் கருவானாய்
கல்விக்கும் குருவானாய்

பெண்ணே நீ,
யாதுமாகி நின்றாய்...!!!

எழுதியவர் : (28-Mar-16, 7:12 pm)
Tanglish : yathumaagi nindrai
பார்வை : 163

மேலே