என் அழகி
கன்னத்தில் குழியழகி
வளைந்தாடும் இடையழகி
இமையோடு சேர்ந்தசையும்
பொற்சங்கு விழியழகி
ஜாடையிலே நான் பேச
கோபத்தில் திசை மாறும்
முக்கோண மூக்கழகி
மோகமில்லா பேச்சழகி
தங்கத்தில் வார்த்தெடுத்த
தேகம் மிகு பேரழகி
தேனூறும் இதழழகி
தெவிட்டாத குரலழகி
அழகிற்கு இலக்கணமாய்
வந்தாளே என் அழகி!
***