காதல் அன்றும் இன்றும்
ஓர விழியசைவில்
கடையோர மென் நகையில்
தாவணி நுனியில்
இதழ் சுழிப்பில்
இடை அசைப்பில்
ஒளிந்து இருந்தது
அன்றைய
காதல்!
இன்றைய
காதலோ
அம்பு விழியில் என்ன என்றே வினவ
முறுவலை சுமந்து சுற்று முற்றும் பார்த்தே
என்ன சொல்லப்போகிறாய்? என்று
தோள் உரசி
கேட்கிறது?
ஜன்னல் நிலவாய் இருந்ததை
விண்ணை தாண்டி வருவாயாவென்று
வினவும் காலம் இன்று.
பட்டுப்பூச்சிகள் மட்டுமே சிறகடித்தன
பார்த்தவரெல்லாம் அரும்பு மீசையுடன் குறும்பு பார்வையில்
அன்று!
இன்றோ
மொட்டுக்கள் அவிழ்கின்றன
கட்டிலங்காளைகள் கள்ளப்பார்வையில் களிப்படைகின்றன
காதலா ? வா களத்திற்கு
நீயா நானா பார்க்கலாம் என்று
தெளிவுடன் தீர்க்கமாக
உச்சு கொட்டுகின்றன,
அது வெறும் இச்சை என்பதால்?