எருக்கு மலரான என் நினைவுகள் 555
என்னவளே...
நான் மலரென்றும் நீ தேன் என்றும்
உன்னை வர்ணித்தேன்...
எனக்கான தித்திப்பான வாழ்க்கையில்
நீ இருப்பாய் என்று...
உன் வார்த்தை என்னும்
அமிலத்தால் என்னை அரித்துவிட்டாயடி...
உன்னை தொடர்ந்த
என் நினைவுகளை...
உனக்குள் நீ வைத்திருப்பாய்
என்று நினைத்தேன்...
நீ சூடும் மலராகவாவது
நான் இருப்பேன் என்று...
ஏனோ என்னை உனக்கு
பிடிக்காமல் போக...
எருக்கு மலரான
என் நினைவுகள் உனக்குள்.....

