பாடல் -முஹம்மத் ஸர்பான்

எந்தன் மனதினிலே ஏதோ
மாற்றம் செய்தவளே!
இருளில் வாழ்ந்த என்னை
உந்தன் ஒளியில் மலர்ச் செய்தாயே!
இமைகள் மூடினாலும் உன் விம்பம்
எந்தன் தவிப்பில் இன்பமே!
அன்பே! உன் பெயரென்ன!
என்னுயிர் என்று சொல்லவா
நிலவும் அழகில்லை உன்னை
போல் யாரும் உலகிலில்லையே!
எந்தன் மனதினிலே ஏதோ
மாற்றம் செய்தவளே!
இருளில் வாழ்ந்த என்னை
உந்தன் ஒளியில் மலர்ச் செய்தாயே!
உன்னை ஓவியம் நான்
வரைய விழிகள் போதுமடி
உலகில் பல ஜாதி
அதிலும் காதல் ஒன்று தானே!
அன்பே நீ கேட்டால்
என்னிதயம் தர நானும் மறப்பேனா
கோடி விண்மீன்கள் மண்ணில்
உந்தன் சிரிப்பினால் ஜொலிக்க
நானும் ரசிக்கின்றேன்
எந்தன் மனதினிலே ஏதோ
மாற்றம் செய்தவளே!
இருளில் வாழ்ந்த என்னை
உந்தன் ஒளியில் மலர்ச் செய்தாயே!
கவிதை படிப்பதற்கு உன்
பெயரை பதித்தால் சிறப்பாகும்
உண்மைக் காதலில் தான்
நெஞ்சே! பிரிவு நேரிடும்
கன்னம் கலங்காதே நீ
நோந்தால் என்னுயிரும் இறந்திடும்
இரவும் பகலும் எதற்கு
காதல் வாழ்வில் கண்ணிரே வானிலை
எந்தன் மனதினிலே ஏதோ
மாற்றம் செய்தவளே!
இருளில் வாழ்ந்த என்னை
உந்தன் ஒளியில் மலர்ச் செய்தாயே!