அவளில்லாமல்

தனிமையில் நானும் நனைகையில் இங்கே, 
மழைத்துளி கூட சுடக் கண்டேன்,

காலையில் வீசும் தென்றலும் இங்கே,
புயலாய் மாறி வீசக் கண்டேன்,

மழை மறைந்து நீர்த்துளி உதவியில்,
தோன்றிய வானவில் கவனிக்க மறந்தேன்,


நிலவு மலரும் இரவு நேரம்,
அல்லி மலர்வதை காணவும் மறந்தேன் ,
அவளில்லாமல்...

எழுதியவர் : வெண்தேர்ச்செழியன் (29-Mar-16, 2:35 pm)
பார்வை : 94

மேலே