புது வசந்தம்

என் வாழ்வின் புது  வசந்தம் நீ,
என் வீட்டின் புது வெளிச்சம் நீ,
என் விரல்களின் புது மோதிரம் ஆனாய்,
என் இதழ்களில் தவளும் புன்னகையுமானாய்

வானம் சென்று,
மேகம் ஏறி,
மின்னல் பிடித்து,
வில்லாய் வளைத்து,
உன் புருவம் செய்வேன்...

கடலில் குதித்து,
சிப்பி எடுத்து,
தரம் பிரித்து,
நல்முத்து சேர்த்து,
உனக்கு மாலை செய்வேன்...


நல்வயல் தேடி,
மண்ணைத் தோண்டி,
வைரம் வெட்டி,
பட்டை தீட்டி,
உனக்கு அட்டிகை செய்வேன்...

நீ என் செய்வாயோ...!!!

எழுதியவர் : வெண்தேர்ச்செழியன் (29-Mar-16, 2:28 pm)
Tanglish : puthu vasantham
பார்வை : 73

மேலே