தொடுதிரை எனும் தொடுவானம்

லவ்யூவாக இருந்தாலும் சரி
மிஸ்யூவாக இருந்தாலும் சரி

சோமச்சில் கொஞ்சம்
அதிகமாகவே
ஓப்போடுகிறாய்.

ஓ விற்காக
நீ இடும்
வெற்று முட்டைகளில்
எனக்கான சிறகுகள்
இருக்கிறது

ஒரு
இரவுக்குத்தேவையான
கண்ணீரைக்கூட
உன்னுடைய பவர் ஆப்
பட்டன் தந்துவிடுகிறது.

பாடல் கேட்டுக்கொண்டே
உன்
தொடுதிரையின்
விரல் நுனியில்
என் சொர்கத்தையும்
நரகத்தையும்
எங்கிருந்தோ
நெய்துவிடுகிறாய்.

விலக்கப்பட்ட ஆப்பிலோடு
அலைகிறாய் நீ.
அதிலிருந்து
அழைக்கப்பட்ட அழைப்புகளோடு
வாழ்கிறேன் நான்..!

- நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (29-Mar-16, 11:35 am)
பார்வை : 159

மேலே