நெஞ்சோடு சுமந்தவள் உன் தாயா

பெண்

நெஞ்சோடு சுமந்தவள் உன் தாயா
அன்போடு சேர்கிறேன் என் தோழா
விண்ணோடு திங்களாய்
இருள் வந்தால் உன் வாழ்வில் வருவேன் - அன்பே

என் சொல் அன்பே நீ கேட்டால்
விண்மீனை நீ தொடுவாயா
தோழா உன் தோள்சாய்ந்தால்
காயம் தீரும் என் அன்பே அன்பே .

நெஞ்சோடு சுமந்தவள் உன் தாயா
அன்போடு சேர்கிறேன் என் தோழா
விண்ணோடு திங்களாய்
இருள் வந்தால் உன் வாழ்வில் வருவேன் - அன்பே

ஆண்

பூங்காற்றை போல என் வாழ்வில் வந்தாய்
உன்னாலே வாழ்வை நான் கொண்டேன்
மின்வெட்டு காலம் உன்னை வாட்டும் என்றால்
மின்சாரமாக என்னுயிர் மாறும்
உறவெல்லாம் பொய்யாக மாறலாம்
என் உயிர் உன்னது அதை சேராதது
என்னோடு நீ உன்னோடு நான்
நாம் வாழ்வில் இன்பங்கள் சேராதா

என் நெஞ்சினுள்ளே நீ பேசும் வார்த்தை
நொடிதோறும் கேட்கும் இதயத்துடிப்பாய்
ஓவியமாக உன்னை நானும் வரைவேன்
உயிர் வேண்டும் என்றால் என் இதயம் தருவேன்
என் காயம் உன் அன்பு ஒழித்தது
என் காலம் உனக்காக வாய்த்தது
என் காதல் நெஞ்சில் துளி காமம் இல்லை
இந்த அன்பை தான் கடவுள் என்று நான் கொள்வேன்

ம் என்று அன்பே நீ சொன்னால்
விண்மீனை கூட நான் தொடுவேன்
தோழி நீ என் தோள் சாய்ந்தால்
காயம் தீரும் என் அன்பே அன்பே

( நெஞ்சோடு கலந்திடு உறவாலே என்னும் பாடல் மெட்டில் என் காதல் வரிகள் )

எழுதியவர் : கவி தமிழ் நிஷாந்த் (30-Mar-16, 10:27 am)
பார்வை : 190

மேலே