கிராமிய சாதியம்

கல்லறை பூவே… கல்லறை பூவே
காதல் வரத்தை இறப்பில் கண்டோம்…!
உயிரும் உடலும் நாமென்று சொல்லி
பொய்களில் புன்னகை சாபமிட்டோம்..!

எழுதா காதல்கள் உள்ளத்தில் இருக்க
எழுதிய காதல் இங்கே கருகிய பயிராய்..
பலமுறை காதலில் கரைந்துவிட்டோம்.
ஜென்மம் ஜெயித்து மீண்டும் நாம் நெஞ்சம் தொடுவோம்.

காற்றுக்கினி நாம் சொல்லி வைப்போம.
நம் மூச்சின் முத்தம் இனி அவற்றுக்கில்லை.
இனி நம் ஊடலை கூடலில் ஒருங்கிணைப்போம்.
இதை உடலுக்கும் உணர்வுக்கும் சொல்லி வைப்போம்.

வரப்போரம் அமர்ந்து பேச வார்த்தைகளும் இனி இல்லை…
வயல் முழுதும் சுற்றி வந்து வம்பிழுக்க வழியுமில்லை.!
வீராப்பாய் கதிரறுக்கும் போட்டி இனி நமக்குள் இல்லை…
விண்ணுலகில் இணைந்திருக்க சாதியினி தடையுமில்லை.!

கல்லறை பூவே… கல்லறை பூவே
காதல் வரத்தை இறப்பில் கண்டோம்…!
உயிரும் உடலும் நாமென்று சொல்லி
பொய்களில் புன்னகை சாபமிட்டோம்..!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (31-Mar-16, 1:17 pm)
பார்வை : 154

மேலே