என் பேனா

என் பேனா!
காதலால் கசிந்தது
கண்ணீர் சிந்தியது
ஏன் என்று கேட்டேன் ?
காதல் கடிதங்கள்
கணக்கின்றி எழுதுகிறேன்
என்னை காதலிக்க
எவளுமே இல்லை என்றது ......
அன்பான பேனாவே-நீ
வெள்ளைத்தாள் எனும்
விதவைப் பேப்பரை
மனமாற முத்தமிட்டு
மையால் எச்சிலாக்கி
கவிதையாய், காவியமாய்
கணக்கின்றி பிள்ளை பெற்று
காதலிஏய் இல்லை என்று
கண்ணீரு சிந்துவாயோ.................!

எழுதியவர் : நல்லசாமி (31-Mar-16, 3:21 pm)
Tanglish : en pena
பார்வை : 226

மேலே