ஓ பெண்ணே

மரபுகள் மாற்றும் மங்கையர் வேண்டும் பாரினில்
மங்கையரைப் போற்றும் மக்களினம் வேண்டும் பாரினில்
மக்களினம் யாவருக்கும் வல்லமை வேண்டும் பாரினில்
வல்லமை கூட்டும் நன்மதி வேண்டும் பாரினில்

சேலைக் கட்டிய பாரதிகள் வேண்டும் பாரினில்
பாரதி பாடிய புதுமைப்பெண்கள் வேண்டும் பாரினில்
புதுமைப்பெண்களின் ஆற்றலில் புதுப்புனைவு வேண்டும் பாரினில்
புதுப்புனைதலால் யாவருக்கும் ஏற்றம் வேண்டும் பாரினில்

சுயாதீன சிந்தனையுடைய பெண்டீர் வேண்டும் பாரினில்
பெண்டீர் அங்கீகரிக்கும் துறைகள் வேண்டும் பாரினில்
துறைகளில் பாலின சமத்துவம் வேண்டும் பாரினில்
சமத்துவம் பாராட்டும் தயாளம் வேண்டும் பாரினில்

சோதனைகள் தாண்டும் பெண்குலம் வேண்டும் பாரினில்
பெண்குல அறியாமையை களைந்திட வேண்டும் பாரினில்
களைந்திட்ட இருளுக்கு பெண்கல்வி வேண்டும் பாரினில்
பெண்கல்வி யாவருக்கும் கிட்ட வேண்டும் பாரினில்

பெண்ணே உன்திறமைகள் வெளிக்கொணர வேண்டும் பாரினில்
வெளிகொணரா உன்அற்புதங்கள் விண்ணாள வேண்டும் பாரினில்
விண்ணாளும் வல்லமை வளர்திடல் வேண்டும் பாரினில்
வளரும் சீமாட்டிகளை போற்றிட வேண்டும் பாரினில்

பெண்ணே நீ நீயாக வேண்டும் பாரினில்
நீயான உன்தனித்துவம் நிலைத்திட வேண்டும் பாரினில்
நிலைத்திட சிறகுகள் வளர்த்திட வேண்டும் பாரினில்
வளரும் சருகே தழைத்திட வேண்டும் பாரினில்!

எழுதியவர் : அருண்மொழி (31-Mar-16, 10:39 am)
சேர்த்தது : அருண்மொழி
Tanglish : o penne
பார்வை : 125

மேலே