முரண்கள்
நல்வரவு
மிதியடியில்
மிதிக்கப்பட்டு
*****வரவேற்பு!.....
=====================
உயிரை விடுகிறேன்
என்று
உடலை விட்டு செல்கிறான்
மனிதன்.....
======================
தரமும் (Quality )
நிறையும் (Quantity )
சேருவதே இல்லை
எந்நாளும்.....
தரம் முதன்மையானது...
நிறை பாரமானது...
======================
வெளியே சொரசொரப்பு
உள்ளே வழவழப்பு
*****பலா!.....
=====================
குடி குடியை கெடுக்கும்
குடிமகன் எடுத்திடும்
அரசாங்க மதுபான பாட்டிலில்...
~ பிரபாவதி வீரமுத்து

