சூழ்நிலைக்கேற்ற பாடல்

................................................................................................................................................................................................

தான் காதலிக்கும் பெண்ணின் பிறந்த நாள் விழாவின்போது அவள் இன்னொருவனைக் காதலிப்பதும், அவன் நல்லவனல்ல என்பதும் தெரிய வருகிறது.. அதை அவளுக்கு இலை மறை காயாய் உணர்த்தும்படியான பாடல்..

..............................................................................................................................................................................................

மாதுபானு மதி மீது தேனருவி
போதுமோ சகியே..

ஏது இன்று மதி தூது வானிருறுத்தி
ஓதுமோ கவியே..

.........

நல்ல நாளிதனை இன்னும் நூறுமுறை
கொள்ள வேண்டும் கனியே.....

தெள்ளு தமிழுரைக்கும் கொள்ளை செல்வங்களை
அள்ள வேண்டும் இனியே... (மாதுபானு)

...........

தீபமேற்றி வரும் தாபவிழி யிரண்டு
தெய்வம் தேடுகிறது..

தெய்வ வடிவெடுத்து திருடன் உலவிவர
சிந்தை வாடுகிறது...
சிந்தை வாடுகிறது... (மாதுபானு)

...........

ராதை மனமகிழ போதை குழலெடுத்து
கண்ணன் வந்து விடுவான்..
கோதை யழைத்தவுடன் பாதை வந்தவருள்
கம்சன் கூட இருப்பான்...
கம்சன் கூட இருப்பான்... (மாதுபானு)

..............

ஊதி அணைக்கும் திருநாளை கண்டமகள்
ஊர்வலம் வருக..
அணைத்து ஊதவொரு தலைவன் வாய்க்குமந்த
அழகுக் கோலம் பெறுக – விரைவில்
அழகுக் கோலம் பெறுக... (மாதுபானு)

...............................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (1-Apr-16, 1:06 pm)
பார்வை : 117

மேலே