நீயொரு கஸல்
நீயொரு கஸல் நீல விழியில் நைல்
பாடும் இசையில் அமுதக் குயில்
அசைந்து வரும் அழகில் நிலவின் எழில்
சிரித்திடும் அழகினில் தாமரைப் பொழில்
கலைந்தாடும் கூந்தல் கார்முகில்
பொதிகைத் தமிழ் நீ காதலில்
புன்னகையே என் கவிதை நீ தரும் அருள் !
----கவின் சாரலன்