கடற்கரை

வான் கதவுடைத்து
அலறிக் கொண்டு
தன்னை கொளுத்தியவனை தேடி
அங்கும் இங்கும்
அலைகிறது சூரியன்

பண்ணையார் கடந்த
பஞ்சமர்கள் வீதியாய்
அன்று
சூரியன் இருந்த கடற்கரை
எட்டிப் பார்க்க
யாரும் துணியவில்லை

வெயில் சுட்ட மணலில்
சூரியன் மிதித்து
பிரார்த்தனை செய்கிறார்கள்
சுண்டல் விற்கும் சிறார்கள்
வறுமை தீர அல்ல
சுண்டல் தீர

பொருத்திருந்த கடல்
ஆர்த்து எழுந்து
ஆதவனை விழுங்கியது
இராவணனை விழுங்கிய
இலங்கை போல்

விடுவிக்கப்பட்ட சீதை போல்
சிறு நண்டுகள்
கடல் குளித்தன

கரை இருந்த போதும்
கடல் மத்தமாகவே
இருந்தோம் என
கற்பு சொல்ல

ஒரு காலத்தில்
கடல் போல் வீட்டில் வாழ்ந்த
மீன் அவர்
குரு பெயர்ச்சியால்
இன்று
கடாயில்
பொரிந்து கொண்டிருக்கிறார்

மாலைப் பொழுதைக்
கண்டதும்
பண்புடைமை பழகாத
வீடில்லா
மனித மிருகங்கள் சில
தான் தூக்கி வந்த
காமக் கழிவுகளை
கழித்துக் கொண்டிருந்தன

கேட்க கூடாத
நீல வார்த்தைகளை
சுமந்து
வந்து வந்து
சொல்லி
திட்டிப் போகிறது அவர்களை
கடல்

என் நிலத்தில்
உங்கள் பெயர் பலகைகளா?
கடல் ஓடி வந்து
அழித்துப் போட்டது
பெயர்களை

எல்லையில் நிறுத்தி
சுடப்பட்ட
வண்ண வண்ண
பலூன்கள் பல
தான் மடிந்து
எஐமானனை
வாழவைத்துக் கொண்டிருந்த
தியாகக் காட்சியை காண
கடல் கூட்டத்தில்
துள்ளி குதித்துக் கொண்டிருந்தன
மீன் குஞ்சுகள்

தாய் பேச்சை மீறிய
மீன் குஞ்சுகள்
பாய் மரக் கண்ணில்
படவே
தன் தியாகக் காட்சியை
தானே கண்டது

தள்ளாடி வந்த
முதுமைக் காற்றுகளின்
ஈரத் தடங்கள்

ஆடிப் பாடி வந்த
சின்னத் தென்றல்களின்
மென் தடங்கள்

நட்புப் பூக்கள்
சிந்திய தேன் துளிகள்

கூட்டுப் பறவைகளின்
பாட்டு கச்சேரி

என

மணலின் மயிர்க்கால்கள்
சிலிர்த்த
பாச நொடிகளும்
அன்று அங்கு உண்டு

அந்த இன்ப நினைவுகளுடன்
அன்று
தூங்கச் சென்றது
கடற்கறை

எழுதியவர் : Raymond (2-Apr-16, 12:47 pm)
Tanglish : kadarkarai
பார்வை : 1572

மேலே