காலத்திற்கு காலன்
மாலையிட்டு மங்கையின் கரம் பிடித்தேன்...-அவள்
மஞ்சள் நிற மேனியை என்
சிங்கமுகம் கொண்டே அலங்கரித்தேன்......!
காத்திருந்தோம். ....,
காத்திருந்தோம். .....-குட்டி
பொற்கிழி வரவை நாடி...
வந்ததோ குட்டிச்சிங்கம்..
வற்றிப்போய் உயிரற்ற
உடலாக....!
மறந்தோம் என் சிங்கத்தை. .
மறந்ததாக நடித்தோம்.-அதை
அம்பலப்படுத்தியது அழுகாட்சி... அதுவும் அசுர வேகத்தில் ...-இந்த
அகிலத்தார் ஆறுதல் கூறும்போது. ..
"நேரமாக "வரும் அசுரன்...
நேராக தாக்குதல் நடத்துகிறானோ..? எங்கள்
காலத்திற்கு காலனாகுபவன் எவனோ...?