மனம் வலிக்க
கணவனும் மனைவியும்
அடித்துக் கொண்டார்கள்
தினமும் எந்நாளும்
ஒரு முறை அல்ல
ஒவ்வொரு நாளும்
வேளையும் எப்போதும்
எதற்கு எனின்
ஒரு காரணம் அல்ல
பலப் பல எவ்விதமும் .
பற்பசை முதல் படுக்கை
வரை பலப்ப்ரிட்சை என
ஏச்சும் பேச்சும் யாவற்றிலும் .
கணவன் பிடித்தால்
ஒரே பிடி மனைவியோ
சுற்றி வளைத்தல் எவ்வகையிலும்.
முடிவே இல்லையா என்று
மனம் வலிக்க எண்ண
விடிவே இல்லையா எக்காலமும்.