-இப்படிக்கு விவசாயி

வானம் பாத்த பூமியின்னு
பொத்தி பொத்தி பாத்துகிட்டேன்...

கிடச்ச தண்ணிய சேத்து வச்சேன்
சேத்துல கால வச்சு வெத வெதச்சேன்...-அந்த
வருணணோ அள்ளிக் கொடுத்தான்.

நா வெதச்ச வெதயெல்லா அவ வாய்க்குல்ல போயிடுச்சே னு

அழுது புலம்பினே அந்த அரசாங்கத்திடம்.

அவனும் தந்தான் கடல விதய...
திரும்ப கேட்டது மொத்த விளச்சல..

இரண்டு ரூபாய்க்கு தந்த விளச்சல
பத்து ரூபாய்க்கு தர்ரான் எனக்கு. ..

உலகத்துக்கே சோத்தபோடும்
எனக்கு விடியிறபொழுது எப்போது.?

-இப்படிக்கு ..,விவசாயி. .!

எழுதியவர் : மோகன் சிவா (4-Apr-16, 5:15 pm)
பார்வை : 903

மேலே