காதலில் தொலைந்து போ

பார்வைக்கும் சுவை இருக்கும்
விழிகளுக்கும் பசி இருக்கும்
பார்வை தின்று உணர்ந்து கொள்

இமைகளை தாண்டி
விழிகளை தாண்டி
ஏதோ ஒன்று உன்
இதயம் வரை சென்றால்

கடந்து போன பின்பும்
காட்சிகள் யாவும் உன்
கருவிழியை போர்த்தி நின்றால்

புது வித சுவை ஒன்று
நாவறியா வண்ணம்
மனதோடு வந்து
நாற்காலி போட்டு
நிற்பதென்றால்

காதலின் சுவை என்று
திகட்ட திகட்ட
தின்று கொள்

ஆனாலும் பசியை
மட்டும் அன்றாடம் வைத்து கொள்

புன்னகையை விட ஒரு
அமிர்தம் இருக்குமா ?

ஆம் என்றால்
நீ காதலின் முதல் படி கூட
அடி எடுத்து வைக்காதவன்
என்று தலையில் ஒரு
குட்டு வைத்து கொள்

காதலர்களுக்கு
புன்னகையை விட
வேறொன்றும் உயர்வு இல்லை
என்பதை
புன்னகையை புசித்து புசித்து
புரிந்து கொள்

கடைகண் பார்வைக்காக
காலங்காலமாய்
காலம் கடத்து,

ஓரவிழி பார்வை
உயிர் தடவும்
ஒரு நொடி போதும்

அவளின் & அவனின் வருகைக்காக
கால் வலிக்க காத்திரு
மீண்டும் ஒருமுறை
இந்த சந்தர்ப்பம்
வாய்ப்பது அரிது

முகநூல், மின்னஞ்சல்
கதவினை அடைத்து
வெள்ளைத்தாலில்
உன் எண்ணங்களை
பதிவு செய்

விரல்களுக்கும் பேச தெரியும்
எழுத்துக்களுக்கும் உணர்விருக்கும்
பேனா மைக்கும் சிரிக்க தெரியும்
வெள்ளை காகிததிற்குள்ளும்
உன் என்னவள் & என்னவன்
ஒளிந்திருப்பாள்(ன்)

ஒளிந்து ஒளிந்து விளையாடு
வார்த்தைகள் காட்டி கொடுக்கும்
அவர்களின் இருப்பிடத்தை

கதிர் வந்தும்
துயில் கொள்ளும் பழக்கம் மாற வேண்டுமா
காதலில் தொலைந்து போ

நீ எழுந்து கதிரை எழுப்புவாய்

அழகான நீ பேரழகாய்
மாற வேண்டுமா ?
காதலில் தொலந்து போ

நடை உடை பாவனை மாறி
உன்னை நீயே புதியாய் பார்ப்பாய்

பொய் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டுமா?
காதலில் தொலைந்து போ
பெற்றவர்கள் தொடங்கி
நண்பர்கள் வரை
பொய் சொல்லியே பொழுதை கழிப்பாய்

வாழ்க்கையில் வெல்ல வேண்டுமா?
காதலில் தொலைந்து போ

உனக்காக அல்லாமல்
உன் காதலுக்காக
வெற்றியை தேடி
வேகமாய் ஓடுவாய்

அழுது பார்க்க ஆசையா?
காதலில் தொலைந்து போ

மனதோடு அழுகை
அவ்வபோது வந்து போகும்

நீ வேண்டாம் என்றாலும்
வேண்டுமென்றே விலகினாலும்
வேண்டாதவேலை என்றாலும்
வெட்டி செயல் என்றாலும்

காதலும் வந்து போகும்
இது காலத்தின் பாதை

வெறும் உடம்பிற்காக காதல் கொள்ள
விபச்சார விடுதியல்ல காதல்

பணத்திற்காக காதல் கொள்ள
பண்டமாற்று பொருள் அல்ல காதல்

கடமைக்காக காதல் கொள்ள
பொழுதுபோக்கு விளையாட்டல்ல காதல்

விழியோடு தொடங்கி
மனதோடு இறங்கி
உயிரோடு நடந்து
காதலில் தொலைந்து போ

காதல் என்னும்
வீதியில்
கனவுகள் சுமந்து சுமந்து

கற்பனைக்குள் ஒளிந்து ஒளிந்து
காதலில் தொலைந்து போ

காதல் திருமணத்தில் முடிந்தால்
வாழ்வு முழுக்க
வசந்தங்களுடன்
காதலில் தொலைந்து போ

காதல் தோல்வியா
கவலையை விடு

காதல் தந்த வலிகளுடன்
சுகமான நினைவுகளுடன்
வாழ்க்கை என்ற
வண்டி ஏறி

காதலை விட்டு தொலந்து போ . . . . . . .


ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (4-Apr-16, 7:25 pm)
பார்வை : 256

மேலே