உனக்காக காத்திருக்கிறேன் உயிரானவளே 555
என்னுயிரே...
நான் யாருக்காக தினம் தினம்
காத்திருக்கிறேன் என்பது...
உனக்கு தெரியும்...
உன் தோழிகளோடு
சந்தோசமாக வருபவள்...
என்னை கண்டதும் வினாடி
நின்று கோபத்துடன்...
நீ மண்ணை பார்த்து
நடப்பதும் எனக்கு தெரியும்...
நீ புருவம் உயர்த்தி கோபத்துடன்
என்னை பார்த்தாலும்...
உனக்கே தெரியாமல் நீ என்னை
அனைத்துவிட்டுதான் செல்கிறாய்...
நீ என்னை கடக்கும் அந்தவினாடி
தனியாகத்தான் கடக்கிறாய்...
உன் முழு உருவத்தின் நிழல் என்னை
அணைத்துவிட்டு செல்லுதடி...
அதனால்தான் நான் தினம் தினம்
கதிரவனுக்கு எதிர் திசையில்...
உனக்காக காத்திருக்கிறேன்
என் உயிரானவளே...
நாளை நாம் ஒன்றாக
கை கோர்ப்போம் என்று.....