தந்தை நீயே தெய்வம் என்னுள்
உறக்கம் என்னில் வரவில்லை..
உணர்வெல்லாம் உயிராய் துடித்திட.
எனையறியாமல் என்னுள்ளே...
ஏனிந்த பதற்றம்...
கண் முன் நீயில்லை...
அலைப்பேசியில் பேசினேன்..
இருந்தும் என்னுள் சிறுகவலை...
என்ன செய்ய உன்னை விட்டு...
நான் வெகு தொலைவில்...
தூக்கம் என்னில் தங்கிட...
இன்று விரும்பவில்லை என நினைக்கிறேன்...
நடுச்சாமத்தில் அலைப்பேசி அழைத்திட...
காலைப்பொழுதில் பயணம் என்று..
தந்தையே உன் விழி...
என்னை பார்த்திட துடிக்கிறது...
என்ற முற்றுப்பெறா செய்தியில்..
என் நினைவு சுற்றி முற்றி சுழல்கிறது...
உன்னிடம் பேசிட...
அந்த நொடி அடித்தேன் அலையோசையை...
காற்றலையின் வேகத்தை தாண்டி..
என் சுவாசம் பறந்தது..
அடித்துக்கொண்டே இருக்கிறது....
எடுத்திட எவருமில்லை....
என் எண்ணங்களின் வேதனை...
எவருக்கும் வேண்டாம் இவ்வுலகில்..
உன்னுலகமாய்...
எந்நொடியும் என்னை பார்த்தாய்..
தந்தையே...
தடமறியாமல் தவிக்கிறேன்...
தகவல் ஏதும் அறியாமல்...
தனிமையில் நான் இங்கே..
என்னை நினைத்து நீ அங்கே...
தவமாய் எனக்கு கிடைத்த தங்கம் நீ.
என்னுள் வேதனை...
சொல்லிடவும் என்னருகே எவருமில்லை...
கண்ணிலே கண்ணீர் துளிகள் எட்டி பார்த்திட...
என் கனவுகளின் நாயகன் நீ...
உன்னை நினைத்து நான்...
இந்த நொடி வேதனை..
எந்நொடியும் எவருக்கும் வேண்டாம்...
என்னோடு போகட்டும்..
உன்னை நோக்கி நான் வருகிறேன்..