பெண்ணியம் கவிதை

பெண்ணியம் : பல கோணங்கள்
----------
பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம் என்பது ஒரே நிலைப்பாடு கொண்டதல்ல. அதனுள் பல கருத்தியல்கள் - கோணங்கள் உண்டு. அவற்றுள், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.

1) மிதவாதப் பெண்ணியம்

இது பெண்ணின் சிறப்புக்களைக் கூறுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறது கடவுளுக்கு முன், ஆண் - பெண் எல்லோரும் சமம் என்று சொல்லுகிற அதே நேரத்தில் அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கிறது. வழக்காடுமன்றங்கள், சட்டமன்றங்கள் முதலியவற்றிற்குப் போவதில் ஆர்வம் கொள்கிறது.

2) போராட்ட குணம் மிக்க பெண்ணியம்

பெண் உரிமைகளைப் போராடித்தான் பெற முடியும்- பெறவேண்டும் என்று இது வற்புறுத்துகிறது. பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவற்றிற்காக இது போராடிப் பெற்றும் தந்துள்ளது.

3) தீவிரவாதப் பெண்ணியம்

நவீனப் பெண்ணியம் என்று சொல்லுகின்ற இது, ‘அரசியல் அமைப்புச் சட்டங்களிலும் அரசு ஆணைகளிலும் வழங்கப்பட்டுள்ள ஆண் - பெண் சமத்துவம் நடைமுறையில் அவைக்குதவாதது’ என்று குற்றம் காட்டுகிறது. குடும்பம், பாலியல் உறவு முதலியவை பெண்ணை அடிமைப் படுத்துகின்றவை; எனவே இவற்றிலிருந்து பெண் விடுதலையாகி, வெளியே வர வேண்டும் என்று பேசுகிறது.

4) புரட்சிகரப் பெண்ணியம்

பாலியல் உரிமை (sexual right), கட்டற்ற அல்லது கட்டுப்பாடற்ற பாலியல் உறவு (free sex), பெண் - ஓரினச் சேர்க்கை (lesbianism), குழந்தை பெறுவதை மறுத்தல்- முதலியவற்றை இது வலியுறுத்துகிறது.

5) சமதர்மப் பெண்ணியம்

குடும்பத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும் பெண், பொருளாதார அடிப்படையில் சுய நிலையும் பெறவேண்டும். அப்போதுதான் பெண் விடுதலை சாத்தியமாகும் என்று சொல்கிறது. ஒட்டுமொத்தமான சமூக - சமதர்ம அமைப்பிலேயே பெண்ணும் நிரந்தரமாக சமத்துவநிலை பெறுகிறாள் என்று இது கூறுகிறது. இந்தியாவில்/ தமிழகத்தில், பெண்ணியச் சிந்தனைகளில் இதுவே பெரும்பான்மையாகக் காணப்படுகிறது.

நன்றி ;தமிழ்வு தளம்

-----

ஒரு நாட்டின் விடுதலை ....
ஒரு நாட்டின் அபிவிருத்தி ....
ஒரு நாட்டின் செழிப்பு ....
முதலீட்டால் மட்டுமல்ல ....
முதன்மையாக பெண்ணை ....
மதிப்பதேயாகும் ....!!!

விடுதலை பெற்ற நாடுகளும் ....
அபிவிருத்தியடைந்த நாடுகளும் ....
பெண் அபிவிருத்தியால் தான் ....
ஏற்பட்டதை யாவரும் அறிவர் ....!!!

கவி நாட்டியரசர்
கே இனியவன்

எழுதியவர் : கவி நாட்டியரசர் (5-Apr-16, 8:56 pm)
Tanglish : penniam kavithai
பார்வை : 512

மேலே