காங்கிரசுக்கு உயிர் கொடுத்த காமராஜர் திட்டம்
கட்சியை பலப் படுத்த எண்ணினார் காமராஜர்!
கலந்தாலோசித்தார்
பண்டித நேருவையும் இதர தலைவர்களையும்!
பலமடைய ---
கட்சி குறுகிய வட்டத்தை விட்டு வெளி வர வேண்டுமென்றார்!
விசாலத் திட்டமிட முன்வர வேண்டுமென்றார்!
திட்டத்தை உருவாக்கி வெளியிடவும் செய்தார்!
என்ன சொன்னார்?
"மூத்த தலைவர்கள் பதவி விலக வேண்டும்!
கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும்!
செய்தால் --
இந்தியா முழுதும் இயக்கம் வலிமை பெறும்!" என்றார்!
இதை
'காமராஜர் திட்டம்' என்றும் அழைப்பர்!
'கே.பிளான்" என்றும் அழைப்பர்!
ஏற்றனர் நேருவும் மற்ற தலைவர்களும்!
முன் உதாரணமாய் நிற்க நினைத்தார்!
நொடியில் துறந்தார் முதல்வர் பதவியை
பக்தவத்சலத்தை முதல்வர் ஆக்கி விட்டு!
மூத்த தலைவர்கள் பலர் பலர் விலகினர்
பதவி துறக்கும் வருத்தம் இன்றியே!
கட்சிப் பணிகளில் முனைந்து இறங்கினர்!
" தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்ல
அமைச்சர்கள் பதவி ஆசை துறத்தல் அவசியம்!"
என்று நினைத்ததால் திட்டத்தை கொணர்ந்தார்!
அத்தனை தலைவரும், அத்தனை அமைச்சரும்
திட்டத்தை பணிவுடன் மகிழ்ந்து ஏற்றனர்!
இத்தனை அரிய தலைமை சக்தியை
எப்படி அடைந்தார் காமராஜர்?
அத்தனை பேரும் மறுப்பின்றி ஏற்கும்படி?
தன்னலம் இல்லா தேச பக்தர் அன்றோ?
சமயோசித புத்தி நிறை சிந்தனை சிற்பி அன்றோ?
சோதனைகளை அஞ்சாது எதிர்கொள்ளும் வீரர் அன்றோ?
ஏற்றனர்:"கர்ம வீரர் முடிவில் தவறும் உண்டோ?"