எனக்கு எல்லாம் நீயே அதுபோல் உனக்கு எல்லாம் நானே

சாக்கடல் (Dead Sea ) என்பது நீயானால்
அதில் மிதக்கும்
மிதவை நானன்றோ...

நாம் என்பதும்
இங்கே உண்மையானால்
நாம் ஃபிபனாக்ஸி
என்பதும் சரியன்றோ...

கால்கள் ஓட்டம்
இல்லையென்றாலும்
மார்பின் ஓட்டம்
நிற்கவில்லை
உந்தன் விழியால்...

கணினியின்
மென்பொருளே
வன்பொருளை
ஏற்பாயோ...

பங்குசந்தை
நிலவரத்தில்
ஏறுமுகம்
நீயாகு
நான் உன்னில்
முதலீடு
செய்து
வென்றிடுவேன்...

மரிக்கொழுந்தாய்
மாறி எனை
மரிக்க செய்தவனே
அப்புறம் என
கூறி எனை
அப்புற(ர)ப்படுத்தியவனே...


தரைத்தளமாய் இருந்து
எனை தாங்குபவனும் நீயே...
ஆகாயமாய் இருந்து
எனை மிதக்க (பறக்க) வைப்பவனும் நீயே...
நீரில் எனை மூழ்கடிப்பவனும் நீயே...
மூர்ச்சையில்
உயிரை தந்தவனும் நீயே...
நான் சுவாசிக்கும் காற்றில் கலந்தவனும் நீயே...
உயிர் ஜோதியில் கரைந்தவனும் நீயே...


எனக்கு எல்லாம் நீயே...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (6-Apr-16, 9:07 am)
பார்வை : 211

மேலே